நாட்டுக்கு மாற்றம் தேவை என்கிறார் நஜிப் சகோதரர்

நாட்டுக்கு மாற்றம் தேவை என்கிறார் நஜிப் சகோதரர்

1 mins read
e7c17116-26b9-4394-be7c-43b102c76ae1
-

கோலாலம்பூர்: தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பு ஏற்று ள்ள டாக்டர் மகாதீரைப் பாராட்டிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் சகோதரர் நஸிர் ரசாக், கடந்தகால அரசாங்கம் மாற்றங்களைச் செய்ய தவறிவிட்டது என்றார். மலேசிய வரலாற்றில் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் 2003ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு பிரதமரான நஜிப் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய டாக்டர் மகாதீர் தேர்தலில் மூர்க்கத்துடன் போராடி மீண்டும் 92வது வயதில் பிரதமராகியுள்ளார். திரு மகாதீர் பதவியேற்ற மறு நாளான நேற்று சமூக ஊடகத்தில் தமது கருத்தை வெளியிட்ட மலே சியாவின் இரண்டாவது ஆகப் பெரிய வங்கியான 'சிம்ப் குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்' தலை வரான நஸிர் ரசாக், நாட்டுக்கு மாற்றம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். இதற்கிடையே தேர்தல் தோல் வியைத் தொடர்ந்து அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.