வாஷிங்டன்: வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் கைவிட்டால் அந்நாட்டின் பொருளியலை மேம் படுத்துவதற்கான உதவிகளை செய்வோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்தார். "எங்களுடைய தென்கொரிய நண்பர்களுடன் சேர்ந்து வட கொரியாவின் பொருளியலுக்கு உதவ முடியும்," என்றார் அவர். வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து நாடு திரும் பிய போம்பியோ, "வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான பேச்சுவார்த்தை ஆக்ககரமாக இருந்தது," என்றார். சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ல் வடகொரியத் தலைவர் கிம்மும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசுகின்றனர். இரு தலைவர்களும் இதற்கு முன்பு ஒருவரை ஒருவரை தாக் கியும் குறை சொல்லியும் மிரட்டியும் பேசி வந்தனர்.
வடகொரியாவில் மே 9ஆம் தேதி அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்தித்த போம்பியோ. படம்: ராய்ட்டர்ஸ்

