சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியா வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இறந்துகிடந்த சம்பவம் சுற்று வட்டார மக்களை அதிர்ச் சியில் ஆழ்த்தியுள்ளது. கத்ரினா மைல்ஸ் குடும் பத்தின் பெயர் தெரிவிக்க விரும் பாத உறவினர்கள், "எப்படி இது நடந்தது என்பதை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை," என்று கூறினர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெர்த் நகரத்துக்கு தெற்கே 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒஸ்மிங் டனில் உள்ள பண்ணை வீட்டில் கத்ரினா மைல்ஸ், அவரது நான்கு பிள்ளைகள், அவரது இரு பெற்றோர் உட்பட ஏழு பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துகிடந்தனர். இறந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தே கிக்கின்றனர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக ஒருவர் தொலைபேசி யில் தகவல் அளித்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இறந்துகிடந்த ஏழு பேரில் ஐவர். படம்: கேத்ரினா ஃபேஸ்புக்

