மியன்மாரில் 19 பேர் மரணம்

மியன்மாரில் 19 பேர் மரணம்

1 mins read

யங்கூன்: மியன்மாரில் ராணுவத் துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். தெற்கில் ஷான் மாநிலத்தில் மோதல் நிகழ்ந்ததாக மியன்மார் ராணுவமும் உள்ளூர் ஊடகங் களும் தெரிவித்தன. "சண்டையில் 19 பேர் மாண் டனர்," என்று கூறிய ராணுவம், இரண்டு டஜனுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்றும் குறிப் பிட்டது.

மியன்மாரின் மேற்கு பகுதியில் வசிக்கும் ரோஹிங்யா விவ காரத்தில் அனைத்துலக சமூகத் தின் பார்வை படிந்துள்ள வேளை யில் சீன எல்லையோரமுள்ள தெற்கு மியன்மாரில் மற்றொரு மோதல் நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே மியன்மார் ராணுவம் இன ஒழிப்பில் ஈடுபடு வதாக அனைத்துலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தன்னாட்சி கேட்டு போராடி வரும் டாஆங் தேசிய விடுதலை ராணுவத்துக் கும்(டிஎன்எல்ஏ) அரசு படை களுக்கும் இடையே மோதல் ஏற் பட்டுள்ளது.