ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகத் திறப்பு விழா

ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகத் திறப்பு விழா

1 mins read
d1bf44e7-a4ad-47ef-a4c5-7056ee5a5f91
-

வா‌ஷிங்டன்: ஜெருசல நகரில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே அமெரிக்காவின் புதிய தூதரகம் நாளை அதிகாரபூர்வமாகத் திறக் கப்படுகிறது. இந்த நிகழ்வில் அதிபர் டிரம்ப் காணொளி வழியாக உரையாற்று வார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. திறப்பு விழாவில் 800க்கும் மேற்பட்ட அமெரிக்க, இஸ்ரேலிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் அதிபர் டிரம்ப் நேரடியாக உரையாற்றுவாரா அல் லது முன்பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்படுமா என்பது பற்றி தூதர் டேவிட் ஃபிரைட்மேன் விளக்கமளிக்கவில்லை.

இதற்கிடையே "அமெரிக்க தூதரகத்தின் இடமாற்றத்தால் அடுத்த வாரம் பெரிய வாரமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த் துகள்," என்று வெள்ளிக்கிழமை அன்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் டெல் அவிவில் தங்களுடைய கடைசி நாள் பணியை முடித்துக் கொண்ட தூதரக ஊழியர்கள், திங்களன்று வேலையைத் தொடங்குவதற்காக ஜெருசலத்திற்குப் புறப்பட்டனர். அன்று மாலையே திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப் போது அதிபர் டிரம்ப் காணொளி வழியாக உரையாற்றவிருக்கிறார்.

ஜெருசலத்தில் அமைந்துள்ள புதிய அமெரிக்க தூதரகம். படம்: ஏஎஃப்பி