வாஷிங்டன்: எதிரும் புதிருமாக இருந்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் முதல் முறையாக ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நேரடியாகச் சந்தித் துப் பேச விருக்கின்றனர். இந்த சந்திப்பை உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர் பார்க்கின்றன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய அணுகுண்டு சோதனை நிலை யத்தை அழிக்கப்போவதாக வட கொரியா அறிவித்துள்ளது. அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக உறுதி கூறிய வட கொரியா, அதை நிறைவேற்றும் வகையில் மே 23, மே 25 தேதி களுக்கு இடையே செய்தியாளர்கள் முன்னிலையில் புங்யேரி என்ற இடத்தில் உள்ள அணுகுண்டு பரிசோதனை நிலையத்தை முற்றிலுமாக அழிக்க திட்டமிட்டுள் ளது.
அதிபர் டிரம்ப். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

