பாரிசில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் பலி

1 mins read
d8fe1d76-3839-404f-8306-1fa44885e0c4
-

நகரில் ஒருவன், கண்மூடித்தன மாக எதிரில் வந்தவர்களையெல் லாம் கத்தியால் தாக்கியதில் ஒருவர் இறந்தார் என்றும் நால்வர் காயம் அடைந்தனர் என்றும் பிரெஞ்ச் போலிசார் நேற்று தெரி வித்தனர். ஒபேரா மாவட்டத்தில் நடை பெற்ற இந்தப் பயங்கர சம்பவத்தில் கத்தியால் தாக்கிய ஆசாமியை போலிசார் உடனடியாக சுட்டுக் கொன்றனர். இதற்கிடையே தனது வீரர் களில் ஒருவர் சனிக்கிழமை இரவு தாக்குதலை நடத்தியதாக 'ஐஎஸ்' பயங்கரவாத அமைப்பு நேற்று அறிவித்தது. தாக்குதல் நடத்தியவர் 1997ல் பிறந்தவர், செச்சன்ய குடியரசைச் சேர்ந்தவர் என்று பிரெஞ்ச் ஊட கங்கள் தெரிவித்தன. இவரது பெற்றோரை தடுப்புக் காவலில் வைத்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.

கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள். படம்: ஏஎஃப்பி