கோலாலம்பூர்: மலேசியாவில் பிரதமர் மகாதீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதிய நிதி அமைச் சர் லிம் குவான் இங் இரு முறை சிறை சென்றவர். அவரை டாக்டர் மகாதீரே இரு முறை சிறையில் அடைத்துள் ளார். சென்ற சனிக்கிழமை அன்று தனது அமைச்சரவையில் இடம் பெற்ற மூன்று முக்கிய அமைச் சர்களின் பெயர்களை பிரதமர் மகாதீர் வெளியிட்டார். இவர்களில் முன்னைய வங்கியாளரும் பட்டயக் கணக் காளருமான லிம் குவான் இங்கும் ஒருவர். இவருக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பை சீனர் ஒருவர் ஏற்றுள்ளார். முன்னைய அரசாங்கத்தில் அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக், நிதித் துறையைத் தனது வசம் வைத்திருந்தார். திரு லிம், 58, மலேசிய அரசியல் வட்டாரத்தில் பினாங்கு மாநில முதல்வராக நன்கு அறி முகமானவர். பொருள் சேவை வரியை நீக்கு வதாக மகாதீர் அரசு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை நிதி அமைச்சரான லிம் முக்கு உள்ளது. வருமான பற்றாக் குறையையும் அவர் சீர்செய்தாக வேண்டும். இதில் 2016ல் அதிக உள்நாட்டு உற்பத்தியை பதிவு செய்த பினாங்கு மாநிலத்தின் பொருளியலை நிர்வகித்த அனு பவம் அவருக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாதீரும் லிம் குவான் இங்கும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

