சுரபாயா: இந்தோனீசியாவில் கொடூரமாக நடத்தப்பட்ட தற் கொலைத் தாக்குதல் நடத்தப்படட விதம் குறித்து தகவல்கள் வெளி யாகி உள்ளன. ஐவர் அடங்கிய ஒரு குடும் பமே இத்தாக்குதலை நடத்திய தாக போலிஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. அவர்களின் படத் தையும் அது வெளியிட்டுள்ளது. கிழக்கு ஜாவா மாநில தலை நகரான சுரபாயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து மூன்று தேவாலயங்களில் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தப் பட்டது. ஒரு தேவாலயத்தை ஒன்பது வயது, 12 வயது மகள்களுடன் சேர்ந்து ஒரு பெண் குறிவைத்துத் தாக்கியதாகவும் மற்ற இரு தேவாலயங்களில் அந்தப் பெண் ணின் கணவரும் இரு மகன் களும் தாக்குதல் நடத்தியதாக வும் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய போலிஸ் தலைமை அதி காரி டிடோ கர்னாவியன் கூறி னார்.
ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொண்ட குடும்பம் இது என்று போலிஸ் வெளியிட்ட படம். படம்: இந்தோனீசிய போலிஸ்

