மலேசிய நிதி அமைச்சின் தலைமை அதிகாரி மாற்றம்

மலேசிய நிதி அமைச்சின் தலைமை அதிகாரி மாற்றம்

1 mins read
418ca613-ac4d-4d96-b693-8f21af6f6c08
-

புத்ராஜெயா: மலேசிய பிரதமர் பொறுப்பேற்று இருக்கும் டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று தமது பணிகளைத் தொடங்கினார். முதற்கட்டமாக புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் அமைச்சுகளின் தலைமைச் செய லாளர்களைச் சந்தித்தார். அடுத்த சில மாதங்களுக்கு நிகழவி ருப்பவை குறித்து விளக்கு வதற்காக அவர்களை பிரதமர் மகாதீர் சந்தித்ததாகத் தெரிவிக் கப்பட்டது. உயர்நிலை பதவியில் இருந்த அதிகாரிகளின் பதவி மாற்றமும் நேற்று நிகழ்ந்தது.

குறிப்பாக, நிதி அமைச்சின் கருவூல தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லா அந்தப் பதவி யிலிருந்து நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். பொதுச் சேவைத் துறைக்கு அவர் மாற்றப்பட்ட நடவடிக்கை உடனடியாக நடப்புக்கு வருவதாக உத்தரவிடப்பட்டது என மலேசி யாவின் தேசிய செய்தி நிறுவன மான பெர்னாமா தெரிவித்தது. நிதி அமைச்சின் உயர் அதி காரி என்ற முறையில் அரசாங்கம் அங்கம் வகிக்கும் பல்வேறு நிறு வனங்களின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் திரு இர்வான். மோசடி நிகழ்ந்ததாகக் கூறப் படும் அரசாங்க நிதியமான 1எம்டிபியின் தலைமைப் பொறுப்பும் அப்பதவிகளுள் அடங்கும்.

பிரதமராக முதல் நாள் பணியைத் தொடங்கிய டாக்டர் மகாதீர் முகம்மது பல்வேறு அமைச்சு களின் தலைமை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். படம்: ஏஎஃப்பி