அமெரிக்க தூதரகம் ஜெருசலேத்திற்கு மாற்றம்: துப்பாக்கிச்சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் மரணம்

அமெரிக்க தூதரகம் ஜெருசலேத்திற்கு மாற்றம்: துப்பாக்கிச்சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் மரணம்

2 mins read
e879524a-4933-48c2-98e9-cf466373dd8f
Google News Preferred Icon

காஸா: அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேத்திற்கு இடமாற்றம் செய் யப்படுவதைக் கண்டித்து இஸ் ரேல்=பாலஸ்தீன எல்லை அருகே நேற்று நடந்த போராட்டத்தின்போது 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட் டனர், ஆயிரத்துக்கு மேற்பட்டவர் கள் காயமுற்றனர். இஸ்ரேல்=பாலஸ்தீன எல்லை யான காஸாவில் நேற்று வன்செயல் கள் வெடித்தன. காஸா எல்லையருகே திரண்ட 15,000க்கு மேற்பட்டவர்கள் கண் ணீர் புகைக்குண்டுகளை இஸ்ரேல் படையினரை நோக்கி வீசி தங் களது கண்டனத்தை தெரிவித்த னர்.

எதிர்ப்பைச் சமாளிக்கும் வித மாகவும் தற்காப்பு முயற்சியாகவும் இஸ்ரேலியப் படை அவர்களை நோக்கிச் சுட்டதில் நேற்று மாலை வரை 38 பாலஸ்தீனர்கள் மாண் டனர். பல்லாண்டு காலமாக பாலஸ் தீனர்கள் தங்களது வருங்கால ராஜ்ஜியத்தின் தலைநகரமாக ஜெரு சலேத்தை உரிமை கொண்டாடி வந்த நிலையில் இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலேத்தை கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்கீகரித்தார். அதனைத் தொடர்ந்து இஸ் ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றும் முடிவை யும் திரு டிரம்ப் அறிவித்து இருந் தார்.

அதற்கிணங்க தூதரகம் சிங் கப்பூர் நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு ஜெருசலேத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. அந் நிகழ்வில் திரு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் தமது கணவர் ஜேரெட் குஷ்னெருடன் பங்கேற் றார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பாலஸ்தீனர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டினர். அவர் களை நோக்கி இஸ்ரேலியப் படை சுட்டதில் காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு தூக்கிச் செல்லப்படு கிறார். பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் உரிமை கொண்டாடி வரும் ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததில் இருந்து அங்கு வன்செயல்கள் பெருகிவிட்டன. படம்: ராய்ட்டர்ஸ்