கோலாலம்பூர்: திரு அன்வார் இப்ராகிம் சிறையிலிருந்து விடுதலையாகி நாடாளுமன்றத்திற்கு திரும்பி வந்ததுமே உடனடியாக நாட்டின் பிரதமராக்க வேண்டாம் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முன்னாள் நிதியமைச்சரான துன் டாயிம் சைனுதின் கூறியுள்ளார். சில காலம் சென்ற பின்னர், அன்வாரை பிரதமராக அறிவிக்கலாம் என்றும் கூட்டரசு அரசாங்கமாக எதிர்க்கட்சி ஆட்சி தொடங்கியவுடன் இந்த மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் பிரதமர் மகாதீரின் ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ள திரு டாயிம் கருத்துரைத்தார். "பக்கத்தான் ஹரப்பான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை, அக்கூட்டணி பின்பற்றவில்லை என்றால் மீண்டும் அவர்களின் ஆதரவை பெறுவது கடினம்" என்றும் திரு டாயிம் கூறினார்.
டாயிம்: அன்வாரை உடனடியாக பிரதமராக்க வேண்டாம்
1 mins read

