பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு

1 mins read
26b26057-87d8-41aa-88fc-43237ba9a1b8
-

காசா: காசா எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பாலஸ்தீனர் கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்டவர்களின் எண் ணிக்கை 58 ஆக உயர்ந் துள்ளது என்று பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்தன. இஸ்ரேலியத் தாக்குதலில் சுமார் 2,700 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் உருவாக்கப் பட்டு 70-வது ஆண்டு நிறைவு நாளான நேற்று இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. 2014 ஆம் ஆண்டு நடந்த காசா போருக்குப் பின்னர் இப்பகுதியில் நடந்திருக்கும் மிக மோசமான வன்முறை தாக்குதல் இது என்று கூறப் படுகிறது.

காசா எல்லையில் இஸ்ரேலியப் படையினருக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மூண்ட மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. படம்: ஏஎஃப்பி