வான் அசிஸா: அன்வாரை பிரதமராக்க அவசரமில்லை

வான் அசிஸா: அன்வாரை பிரதமராக்க அவசரமில்லை

1 mins read

கோலாலம்பூர்: பிகேஆர் எனும் கெஅடிலான் கட்சியின் தலைவர் வான் அசிஸா, தனது கணவர் அன்வார் இப்ராகிமை நாட்டின் பிரதமராக்க அவசரம் தேவை யில்லை என்று கூறியுள்ளார். புதிய பிரதமர் டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே பக்கத்தான் ஹரப்பான் விரும்பு கிறது என்றும் அவர் கூறினார். திரு மகாதீரின் நிர்வாகம் நாட்டுக்குத் தேவையான மாற்றங் களையும் சீர்திருத்தங்களையும் கொண்டுவர வேண்டும் என்பது தங்களது விருப்பம் என்றும் திருமதி வான் அசிஸா கூறினார். அன்வாரை உடனடியாக பிரதமராக்க வேண்டாம் என்று முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் சைனுதின் தெரிவித்திருந் தது குறித்து கருத்துரைத்த போது வான் அசிஸா இவ்வாறு கூறினார். பொது மன்னிப்பு வழங்கப்பட்டவுடன் அன்வார் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்வாரின் விடுதலை பற்றிக் கூறிய வான் அசிஸா, சரியாக எத்தனை மணிக்கு தன் கணவர் விடுதலை செய்யப் படுவார் தெரியவில்லை என்று கூறினார்.