ரியாவ் போலிஸ் நிலையத்தை தாக்கிய நால்வர் சுட்டுக்கொலை

ரியாவ் போலிஸ் நிலையத்தை தாக்கிய நால்வர் சுட்டுக்கொலை

1 mins read
c90d6583-56f3-403c-bfaf-183c73e006f8
-

சுரபாயா: இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் உள்ள போலிஸ் தலைமையகத்தைத் தாக்கிய நால்வரை இந்தோனீசியப் போலிசார் சுட்டுக் கொன்றதாக போலிஸ் பேச்சாளர் கூறினார். முன்னதாக போலிஸ் தலைமையகத்திற்குள் வேகமாக நுழைந்த ஒரு காரிலிருந்து இறங்கிய முகமூடியணிந்த நால்வர் சாமுராய் வாள்களைக் கொண்டு அங்கிருந்த போலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய தாகவும் அத்தாக்குதலில் போலிஸ் அதிகாரிகள் இருவர் காயம் அடைந்த தாகவும் அப்பேச்சாளர் சொன்னார். தாக்கியவர்களில் ஒருவன் தப்பியோட முயன்றபோது ஒரு போலிஸ் அதிகாரி மீது மோதியதால் அந்த அதிகாரி உயிரிழந்ததாகவும் போலிஸ் பேச்சாளர் சொன்னார்.

போலிஸ் நிலையத்திற்கு வெளியில் நின்றிருந்த ஒரு செய்தியாளர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய சந்தேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்தோனீசியாவில் அண்மைய நாட்களில் குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து ரியாவ் போலிஸ் நிலையத்திற்கு வெளியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலிசார். படம்: ஏஎஃப்பி