மலேசியாவில் வரும் ஜூன்-1 முதல் ஜிஎஸ்டி அகற்றப்படுகிறது

மலேசியாவில் வரும் ஜூன்-1 முதல் ஜிஎஸ்டி அகற்றப்படுகிறது

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி முழுமையாக அகற்றப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள 6 விழுக்காடு ஜிஎஸ்டி வரி ஜூன் முதல் பூஜ்யம் நிலைக்குத் தள்ளப்படும். இது தேசிய அளவில் அமலுக்கு வரும் என்று நிதியமைச்சின் அறிக்கை தெரிவித்தது. எனவே, பதிவு செய்துகொண்ட எல்லா வர்த்தகர்களும் இனிமேல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கக்கூடாது என்றும் மற்ற விதிமுறைகளை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. முன்னதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, பொருள் சேவை வரி வசூலிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு தாம் உத்தர விட்டுள்ளதாகக் கூறினார்.