பெட்டாலிங் ஜெயா: பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் பலரும் அமைச்சர்களாக ஆசைப்படுகிறார்கள் என்றும் அவர்கள் முதலில் தங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்து இருக்கிறார். "அமைச்சர்களாக ஆக விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் கண்டிக்கிறேன். முதலில் கண்ணாடியைப் பாருங்கள். நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். மக்கள் ஆதரவு அளித்து இருக்கிறார்கள். இதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்," என்று அன்வார் புதன்கிழமை இரவு பாடாங் திமூரில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது குறிப்பிட்டார். "சில உறுப்பினர்கள் அமைச்சர்களாக முயன்று வருகிறார்கள். அவர்கள் சமையலறையில் அமைச்சர்களாக இருக்கட்டும். அதுவே போதும்," என்றார் டாக்டர் அன்வார்.
அமைச்சராக விரும்பும் எம்பிக்கள்: அன்வார் புத்திமதி
1 mins read

