கோலாலம்பூர்: மலேசியாவின் முன் னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கோலாலம்பூர் வீடுகளில் போலிஸ் குழுவினர் நேற்றும் தொடர்ந்து சோதனை நடத்தினர். கோலாலம்பூரில் தாமான் டுட்டாவில் இருக்கும் திரு நஜிப்பின் வீட்டில் நேற்று நண்பகல் நேரத்திலும் போலிஸ் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அந்த வீட்டில் சோதனை அதி காலை 4 மணிக்கே முடிந்துவிட் டது என்றாலும் தொடர்ந்து போலி சார் அங்கு இருந்ததற்கான காரணம் தெரியவில்லை. யாரும் கைதான தாகவும் தெரியவில்லை.
முன்னாள் சுற்றுலா, கலாசார அமைச்சர் முகம்மது நஸ்ரி அப்துல் அஸிஸ், நேற்று நண்பகல் நேரத்தில் பிஎம்டபிள்யூ காரில் தாமான் டுட்டா வில் இருக்கும் நஜிப்பின் வீட்டிற்கு வந்தார் என்று மலாய் மெயில் தெரி வித்தது. இதனை அங்கிருந்த மலேசிய போலிசாரும் உறுதிப்படுத் தினர். வேறு ஒரு காரும் நஜிப் வீட்டிற்கு வந்தது. ஆனால் அதில் இருந்தவர்கள் யார் என்பது தெரிய வில்லை. இதனிடையே, முன்னாள் பிரத மரான நஜிப், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறாரா? என்று நஜிப் தலைமை வகித்த அம்னோவின் உறுப்பினர் என்று தன்னைக் கூறிக் கொண்ட ஒருவர் கேட்டார்.
கோலாலம்பூரில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீடுகளில் நேற்று காலையிலும் போலிஸ் சோதனை நடந்தது. படம்: ஏஎஃப்பி

