தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாத சந்தேகப் பேர்வழிகள் மேடானில் கைது

1 mins read

ஜகார்த்தா: பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தோனீசியாவின் வடசுமத்ராவில் உள்ள மேடானில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடசுமத்ராவின் போலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து இந்தோனீசியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கடந்த செவ்வாய்க் கிழமையன்று தஞ்சோங் பலாய் நகரில் சந்தேக நபர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக வடசுமத்ரா போலிஸ் படைத் தலைவர் தெரிவித்தார்.

அதிகாரியுடன் மல்லுக்கட்டிய மற்றொருவர் காயமுற்றதாக அறியப்படுகிறது. மேடானில் 'ஓஜேக்' தனியார் வாடகை வாகன ஓட்டுநர் ஒருவரும் பால் வியாபாரி ஒருவரும் பயங்கரவாதம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் கூறினர். நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி சந்தேக நபர்களின் பெயர்களையும் எண்ணிக்கை யையும் இந்தோனீசிய போலிசார் இன்னும் வெளியிடவில்லை. விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயா நகரில் அண்மையில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து, நாடெங்கும் பயங்கரவாத சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.