டிரம்ப்: பொறுத்திருந்து பார்க்கலாம்

டிரம்ப்: பொறுத்திருந்து பார்க்கலாம்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சநிலை மாநாட்டை அடுத்த மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா= வடகொரியா உச்சநிலை மாநாடு நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அணுவாயுதமற்ற நாடாக மாற தமது நாட்டுக்கு மட்டும் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கு தல் அளித்து வருவதைச் சுட்டிக் காட்டி வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அதிருப்தி தெரிவித்திருப்பதாக அறியப்படு கிறது. இதன் விளைவாக அமெரிக்காவுடனான உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்க் கக்கூடும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, நேற்று முன்தினம் நடைபெற இருந்த தென் கொரியாவுடனான சந்திப்பை வடகொரியா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.