வாஷிங்டன்: தம்மைச் சந்திக்கும் போது உடன்பாட்டில் கையெழுத் திட்டால் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்குப் பாது காப்புத் தர இருப்பதாகவும் இன் னும் நிறையச் செய்ய விரும்பு வதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஆனால், லிபியாவை மாதிரியாகக் கொண்டு தாம் நடக்கப்போவதில்லை என அவர் உறுதி கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோ சகர் ஜான் போல்டன் வடகொரிய விவகாரத்தில் லிபியாவை மாதிரி யாகக் கொண்டு செயல்படவேண் டும் என்று பரிந்துரை செய்தது வடகொரியாவை சினமடையச் செய்தது. அவ்விவகாரத்தில் தலை யிட்டு கருத்துத் தெரிவித்த திரு டிரம்ப் லிபியா மாதிரியைத் தாம் பின்பற்றப்போவதில்லை என்றார். "உச்சநிலைச் சந்திப்பின் போது அணுவாயுதக் களைவுக்கு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டால் அதன் பின்னர் கிம் ஜோங் உன் அவரது நாட்டில் இருப்பார். வட கொரியாவை இயக்குவார். வட கொரியா செல்வம் கொழிக்கும் நாடாக உருவெடுக்கும்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

