அன்வார்: தேர்தல் முடிவு வெளியான போது நஜிப் தொடர்புகொண்டார்

1 mins read

கோலாலம்பூர்: மே 9ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் முன்னாள் பிரதமர் நஜிப் தொலைபேசி வழியாக தம்மை இரு முறை தொடர்புகொண்ட தாக அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார். அரச மன்னிப்பு வழங்கப்பட்டு அண்மையில் விடுதலையான திரு அன்வார், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதனைத் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில் 'அடுத்து என்ன செய்யவேண்டும்?' என அறிவுரை கேட்கவே அவர் தம்மைத் தொடர்புகொண்ட தாக அன்வார் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த தாம் தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லுமாறு ஒரு நண்பனாக நஜிப்புக்கு அறிவுரை வழங்கி யதாக அன்வார் தெரிவித்தார். மேலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு காலந்தாழ்த்தாது தோல்வியை விரைந்து ஒப்புக் கொண்டால் நல்லது என்றும் நஜிப்பிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.