பிரதமர் மகாதீர்: கல்வி அமைச்சை மகாதீர் ஏற்கவில்லை

பிரதமர் மகாதீர்: கல்வி அமைச்சை மகாதீர் ஏற்கவில்லை

1 mins read

நாட்டின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கி இருப்பதால் அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக கல்வி அமைச்சர் பொறுப்பைத் தாமே வகிக்கப்போவதாக நேற்று முன்தினம் பிரதமர் மகாதீர் கூறியிருந்தார். இருப்பினும் அவ்வாறு செய்வது பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கைக்கு முரணாக அமையும் என்று தோன்றியதால் கல்வி அமைச்சர் பொறுப்பை அவர் ஏற்கவில்லை. நேற்றைய அமைச்சரவைப் பட்டியலில் கல்வி அமைச்சராக மகாதீரின் கட்சியைச் சேர்ந்த டாக்டர் மாஸ்லீ மாலிக் அறிவிக்கப்பட்டார்.

இவ்விவகாரம் குறித்து விளக்கிய டாக்டர் மகாதீர் "பிரதமர் வேறு அமைச்சின் பொறுப்புகளை ஏற்கக்கூடாது என்பது தேர்தல் அறிக்கையின் ஒரு பிரிவு. நான் அதனை மீறக்கூடாது. கல்வித் துறையை நான் ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை நிலவியது உண்மை," என்று டாக்டர் மகாதீர் கூறினார். இருப்பினும் அந்தக் கோரிக்கைக்கு இணங்க கல்வி அமைச்சை ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு 'இயலாது' என்று அவர் பதில் கூறினார்.