முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபல் வீடு திரும்பினார்

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபல் வீடு திரும்பினார்

1 mins read

லண்டன்: ரஷ்ய முன்னாள் உளவாளி செர்கே ஸ்கிரிபல், இரு மாத சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்றும் இங்கிலாந்தின் சுகாதாரச் சேவை தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்து ராணுவத்துக்கு உளவுத் தகவலை அனுப்பியதால் ரஷ்யாவால் தண்டிக்கப்பட்டவர் ஸ்கிரிபல். அவருக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்ததால் அவர் சாலிஸ்பரி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரும் அவரது மகள் யூலியாவும் சாலிஸ்பரி வணிக வளாகம் ஒன்று அருகே நிலைகுலைந்து கிடந்தனர். அவர்களைப் பரிசோதித்ததில் 'நோவிசோக்' என்ற கொடிய ரசாயன விஷவாயு தாக்குதலுக்கு அவர்கள் ஆளானது தெரிந்தது. இது ரஷ்ய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கொடிய விஷமாகும்.