ஹவானா: கியூபாவில் நேற்று முன்தினம் போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற் பட்டோர் மாண்டனர். அந்த விபத்தில் மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட தாக அதிகாரிகள் தெரிவி த் தனர். அவர்கள் கவலைக் கிடமான நிலையில், மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தலைநகரம் ஹவானாவில் இருந்து கியூபாவின் கிழக்கில் அமைந்துள்ள ஹோல்குவின் நகருக்கு சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கி யது. அந்த விமானத்தில் ஐந்து பிள்ளைகள் உட்பட 104 பயணி களும் ஒன்பது விமானப் பணி யாளர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவி த்தன.
கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படம்: ஏஎஃப்பி

