மலேசியாவின் அம்னோ கட்சித் தேர்தல்கள் ஏப்ரல் 2019க்குள் நடைபெற வேண்டும்

மலேசியாவின் அம்னோ கட்சித் தேர்தல்கள் ஏப்ரல் 2019க்குள் நடைபெற வேண்டும்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் ஆளுங்கட்சியான அம்னோ, அதன் உச்ச மன்ற தேர்தல்களை நடத்த அடுத்த ஆண்டு ஏப்ரல் வரைக்கும் அதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மலேசி யாவின் ஆகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோவில் மூன்று முக்கிய பதவிகளுக்குப் வேட்பா ளர்கள் போட்டியிடுவது அவசியம்தானா என எதிர்க் குரல்கள் எழுந்து உள்ளன. இம்மாதம் மே 9ஆம் தேதி நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் அம்னோ கூட்டணியான தேசிய முன்னணி அதிர்ச்சித் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ, தேசிய முன்னணி கட்சிகளின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினா ர்.