பதவி விலக சிலாங்கூர் முதல்வர் சம்மதம்

பதவி விலக சிலாங்கூர் முதல்வர் சம்மதம்

1 mins read

கோலாலம்பூர்: கூட்டரசு அரசாங் கத்திற்கு உதவ தாம் தேவைப்படும் நிலை ஏற்படுமாயின் சிலாங்கூர் முதலமைச்சர் பதவியை கைவிடத் தாம் தயாராக இருப்பதாக பொரு ளியல் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். "நான் இன்னமும் சிலாங்கூர் முதலமைச்சர்தான். கூட்டரசுக்கு தாம் உதவவேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் முதலமைச் சர் பதவியைக் கை விடுவேன்," என்று அவர் செய்தியா ளர்களிடம் தெரி வித்தார். இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் சுல்தானைச் சந்திப் பதற் காக தாம் காத்திருப் பதாகக் குறிப்பிட்ட அஸ்மின் அலி, இது முதலமைச்சர் பொறுப்பு சம்பந்தப் பட்ட அம்சமாக இருப்ப தால் இதனை சிலாங்கூர் சுல்தா னின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருப்பதாகக் கூறினார்.