அமெரிக்க பொருட்களை சீனா அதிகமாக கொள்முதல் செய்யும் என்று வெள்ளை மாளிகை அறி வித்து இருக்கிறது. வாஷிங்டனில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சீனப் பேராளர், இரு நாடு களுக்கும் இடையில் வர்த்தகப் போர் தவிர்க்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு விடுத்தார். வாஷிங்டன் பேச்சுவார்த் தையை அடுத்து வெள்ளை மாளிகை கூட்டு அறிக்கை வெளி யிட்டது. சீனா எந்த அளவுக்கு அதிகமாக அமெரிக்க பொருட் களைக் கொள்முதல் செய்யும் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.
அமெரிக்காவுடனான தனது வருடாந்திர வர்த்தக உபரியை $200 பில்லியன் அளவுக்குக் குறைக்க சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது என்று அதிபர் டிரம்ப்பின் பொருளியல் ஆலோ சகர் தெரிவித்து இருக்கும் ஒரு கருத்து தொடர்பான விவரங் களும் அந்தக் கூட்டு அறிக்கை யில் இடம்பெறவில்லை. அமெரிக்கப் பேராளர்களுடன் வாஷிங்டனில் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி சீனா வின் துணைப் பிரதமர் லியூ ஹி விளக்கம் அளித்தார். இரு நாடுகளும் வர்த்தகப் போரில் ஈடுபடுவது இல்லை என்று உறுதி தெரிவித்ததாக சீனப் பேராளர் கூறினார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

