பாஹோ(ஹவாயி): ஹவாயில் குமுறும் எரிமலையிலிருந்து தீப் பிழம்புகள் சிதறியதால் முதன் முறையாக ஒருவர் காயம் அடைந் தார். தீப்பிழம்புகள் ஆறுபோல வழிந் தோடுவதால் மக்கள் தப்பிக்க உதவும் முக்கிய ஹவாய் நெடுஞ் சாலையையும் அது அடைத்து விடலாம் என்று அஞ்சப்படுகிறது. நோனி ஃபார்ம்ஸ் ரோட்டில் உள்ள வீட்டின் மூன்றாவது மாடி மாடத்தில் நின்றுகொண்டிருந்த உரிமையாளரை தீப்பிழம்புகள் தாக்கியதாக ஹவாய் மேயர் அலு வலகத்தின் பேச்சாளர் திருவாட்டி ஜெனட் நைடர் கூறினார். உரிமையாளரின் கன்னத்தின் மீது விழுந்த தீப்பிழம்புகள் அவரது காலடியில் கொட்டியது என்றார் அவர்.
ஒரு குளிர்சாதன பெட்டி அளவுக்கு எடைகொண்ட தீப்பிழம்புகளில் ஒரு சிறிய துண்டு பட்டால்கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் குறிப்பிட் டார். வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. ஏற்கெனவே நான்கு வீடுகளை எரிமலைக் குழம்பு நாசமாக்கியுள்ளது. இந்நிலையில் வாண வேடிக் கைபோல சிதறிய தீப்பிழம்புகள் சிவப்பு நிறத்தில் ஆறுபோல வழிந் தோடுகிறது. இதனால் மக்கள் தப்பிப்பதற் காக உள்ள நெடுஞ்சாலையை தீப் பிழம்புகள் மூடிவிடலாம் என்று கூறப்படுகிறது.
எரிமலைத் தீப்பிழம்பு சிதறியதால் முதல் முறையாக ஒருவர் காயம் அடைந்தார் என்று ஹவாயி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

