சாபாவில் முதல்வர் பதவிக்கு சண்டை; போலிசில் ஆளுநர் புகார்

சாபாவில் முதல்வர் பதவிக்கு சண்டை; போலிசில் ஆளுநர் புகார்

1 mins read

கோத்தா கினபாலு: மலேசியாவின் கிழக்கு மாநிலமான சாபாவில் முதல் வர் பதவிக்கு இன்னமும் சண்டை நீடிக்கும் வேளையில் முதல்வர் பதவியி லிருந்து விலக மறுக்கும் மூசா அமானுக்கு எதிராக ஆளுநர் போலி சில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சாபா மாநில தேசிய முன்னணியின் தலைவருமான மூசா அமானிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாபாவில் தாங்கள்தான் முதல்வர் என்று இருவர் உரிமை கொண்டாடு வதால் வழக்கத்திற்கு மாறான சூழ் நிலையை போலிசார் எதிர்நோக்கு கின்றனர். மே 9ஆம் தேதி பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி தோல்விய டைந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப்பான் மத்தியில் பதவியேற்றது. இந்நிலையில் சாபா மாநில சட்ட மன்றத் தேர்தலில் அதிக இடங்களுடன் தேசிய முன்னணி பெரும்பான்மை பெற்றிருந்தது.

இதனால் மறுநாளே மே 10ஆம் தேதி அம்மாநில தேசிய முன்னணியின் தலைவரான மூசா அமானுக்கு ஆளுநர் ஜுஹார் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்போது சாபாவின் 60 சட்டமன்ற இடங்களில் 31 இடங்கள் தேசிய முன்னணியின் வசமிருந்தன. ஆனால் மூசா அமான் பதவியேற்ற மறுநாளே நிலைமை தலைகீழாக மாறி யது. தேசிய முன்னணியில் இருந்த உறுப்பினர்களில் பலர் வாரிசான் சாபா கட்சிக்குத் தாவினர். இதனால் வாரிசான் கட்சியின் பலம் 35க்கு அதிகரித்தது.