கோலாலம்பூர்: மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பானின் புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றுக்கொண்டது. அறுபது ஆண்டுகள் பதவி யில் இருந்த தேசிய முன்னணியை பொதுத் தேர்தலில் தோல்வி அடையச் செய்த பக்கத்தான் ஹரப்பான் இரு வாரங்களுக்குப் பிறகு அமைச்சரவை பொறுப்பை ஏற்றது. மாமன்னர் சுல்தான் முஹமட் முன்னிலையில் நேற்று 13 அமைச் சர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண் டனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 13 அமைச்சர்களின் பெயர்களை பிரதமர் மகாதீர் வெளியிட்டிருந்தார். அப்போது அமைச்சரவையில் மொத்தம் 25 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பக்கத்தான் ஹரப்பானில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சி களை பிரதிநிதிக்கும் வகையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள் ளது.
(இடமிருந்து) தற்காப்பு அமைச்சராக முஹம்மது சாபு, நிதியமைச்சர் லிம் குவான் எங், உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் ஆகியோர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

