மகாதீர்: இழந்த பெருமையை மீட்டெடுப்பது அவசியம்

மகாதீர்: இழந்த பெருமையை மீட்டெடுப்பது அவசியம்

1 mins read
eab4f29a-30ec-437a-b252-310239c8d290
-

நாடு இழந்த பழைய பெருமையை மீட்டெடுக்க அரசாங்க ஊழியர்கள் தமக்கு உதவ வேண்டும் என மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார். "நமது நாடு இதற்கு முன்னர் நன்கு மதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. "உயர்ந்து நோக்குமளவுக்கும் நன்கு மதிக்கப்படும் அளவுக்கும் நாட்டை மீண்டும் முன்னேற்ற வேண்டும்," என்று நேற்று பிரதமர் அலுவலகத்தில் கூடி இருந்த அர சாங்க அலுவலர்கள் மத்தியில் பேசும்போது திரு மகாதீர் குறிப் பிட்டார்.

தான் பதவியேற்றது முதல் தற் போதைய அரசாங்க ஊழியர்களி டமிருந்து எல்லாவித ஒத்துழைப் பும் கிடைத்து வருகிறது என்றார் அவர். "யார் தவறு செய்திருந்தாலும் அந்தத் தவறு நாட்டின் சட்டங் களுக்கு ஏற்ப கையாளப்பட வேண் டும். அவ்வாறு செய்வதன் மூலமே நாட்டின் அரசு நிர்வாகத்தை நாம் தூய்மைப்படுத்த முடியும். "சட்டத்திற்குப் புறம்பாக நான் செயல்படாதிருக்கும் வரை நீங்கள் அனைவரும் உங்களின் ஒருமித்த ஆதரவை ஒரு பிரதமர் என்கிற முறையில் எனக்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

"மலேசியாவின் கடனை அடைக்கவும் நிர்வகிக்கவும் வழி வகைகள் காண்பதற்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது," என் றார் பிரதமர் மகாதீர்.

மலேசிய அரசு அலுவலர்களிடையே உரையாற்ற வருகையளித்த பிரதமர் மகாதீர் முகம்மது. படம்: ஏஎஃப்பி