இலங்கை பெருந்துயரத்தை அனைத்துலக குழு விசாரிக்கக் கோரியவர்கள் கைது

இலங்கை பெருந்துயரத்தை அனைத்துலக குழு விசாரிக்கக் கோரியவர்கள் கைது

1 mins read

தமிழீழ விடுதலைப்புலிகளுட னான இலங்கை போரில் உயி ரிழந்த தமிழர்களுக்காக சென் னையில் நேற்று முன்தினம் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மெரினா கடற்கரையில் அந்த நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று போலிசார் தடை விதித்திருந்தனர். இருப்பினும், பத்துக்கு மேற் பட்ட அரசியல் கட்சிகள், அமைப் புகளைச் சேர்ந்தவர்கள் பாரதி சாலையிலிருந்து கண்ணகி சிலை வரை பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதை அனைத் துலகக் குழு விசாரிக்க வேண் டும் என்பது போன்ற கோரிக்கை கள் அடங்கிய அட்டைகளை பேரணியில் சென்றோர் ஏந்தி இருந்தனர். பேரணி முடிவில், ஈழப் போரில் மாண்டோருக்கு மெழுகு வர்த்தி அஞ்சலி செலுத்த திட்ட மிடப்பட்டது. அதற்காக மெரினா கடற்கரையில் திரண்டவர்களை போலிசார் கைது செய்தனர். தடையை மீறியதற்காக பெண்கள் உள்ளிட்ட 550 பேர் கைது செய் யப்பட்டனர். இந்நிலையில், ஒன்பதாண்டு களுக்குப் பின்னர் தமிழ்ப் பிரிவினைவாதிகள் இலங்கைக்கு வெளியே புத்துயிர் பெற்று வருவ தாக இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேன எச்சரித்துள்ளார்.