மக்களை அச்சுறுத்தும் இரு எரிமலைகள்

மக்களை அச்சுறுத்தும் இரு எரிமலைகள்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள மெரப்பி எரிமலை தொடர்ந்து வெடித்து குமுறிய நிலையில் அதன் சீற்றம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அந்த எரிமலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவ தாக அதிகாரிகள் கூறினர். 2010ஆம் ஆண்டு அந்த எரிமலை வெடித்து குமுறியபோது 350 பேர் உயிரிழந்தனர். இதே போல அமெரிக்காவின் ஹவாயி தீவில் உள்ள எரிமலை தொடர்ந்து வெடித்து குமுறுவதாக தகவல்கள் கூறுகின்றன.