தலைப்பாகை கட்டி பதவி ஏற்ற குலசேகரன்

தலைப்பாகை கட்டி பதவி ஏற்ற குலசேகரன்

1 mins read
6e3d372c-b1bb-49c0-95ed-380bf282e874
-

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலை யில் பிரதமர் டாக்டர் மகாதீரின் தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையில் மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்க இரு அமைச்சர்கள் இடம் பெற்றுள் ளனர். மலேசியாவின் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராகவும் அமரர் கர்ப்பால் சிங்கின் புதல்வர் கோபிந்த் சிங் (சிலாங்கூர் பூச்சோங் நாடாளு மன்ற உறுப்பினர்) தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த 13 அமைச்சர்களும் திங்கட்கிழமை மலேசிய மாமன்னர் முன்னிலை யில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது திரு குலசேகரன் கறுப்பு தலைப்பாகை கட்டியபடி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான விமர்சனங்கள் வந்துள்ளன. திரு குலசேகரன் கறுப்பு தலைப்பாகை கட்டி உறுதிமொழி எடுத்துக் கொண் டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலேசியப் பேரரசர் முன்னிலையில் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எம். குலசேகரன். (நடுவில்). அவர் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்டபோது கறுப்பு தலைப்பாகை அணிந்திருந்தார். சுகாதார அமைச்சராக ‌ஷுல்கிஃப்ளி அகமதுவும் வேளாண் துறை அமைச்சராக சலாவுதின் அயூப்பும் (வலது) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். படம்: ஏஎஃப்பி