கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருக் கின்றனர். பலத்த பாதுகாப்புக்கு இடையில் நேற்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு வந்திருந்த திரு நஜிப்பிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்திய தாக தகவல்கள் கூறுகின்றன.
விசாரணைக்குப் பிறகு நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் தலைமையகத்தைவிட்டு வெளி யேறிய திரு நஜிப், மேலும் விசாரணைக்காக நாளை மீண்டும் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வர விருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். 1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பஹட் நிறுவன விவகாரம் தொடர்பில் திரு நஜிப்பின் வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டதாக அதிகாரி கள் கூறினர்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப், ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பின்னர் அங்கிருந்து செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

