கோலாலம்பூர்: திரு நஜிப்பின வீட்டைச் சோதனைச் செய்த போலிசார் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த சாக்லெட்டு களைத் திருடிச் சாப்பிட்டு விட் டனர் என்று அவர் செய்திருந்த புகாருக்குப் பதிலடி தரும் விதமாக மலேசியர்கள் ஓர் இயக்கத்தை தொடங்கியுள்ளனர். போலிசாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலேசியர்கள் அவர்களுக்குச் சாக்லெட்டுகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வரும் சனிக்கிழமை காவல் நிலையங்களுக்குச் சாக்லெட்டு களை அனுப்பி வைக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர். திரு நஜிப்பின் புகாரைப் பார்த்ததும் அந்த இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தவர் சித்தி காசிம் என்ற வழக்கறிஞர். சாக்லெட்டுக்காக புகார் செய்வதா என்று பலர் திரு நஜிப்பை சாடியுள்ளனர்.
நஜிப்பின் சாக்லெட் புகாருக்கு பதிலடி இயக்கம்
1 mins read

