நஜிப்பிற்கு சொந்தமான வீடுகளில் S$36.8 மில்லியன் பணம் சிக்கியது

நஜிப்பிற்கு சொந்தமான வீடுகளில் S$36.8 மில்லியன் பணம் சிக்கியது

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பிற்கு சொந்தமான வீடுகளில் போலிசார் மேற் கொண்ட சோதனைகளின்போது இதுவரை 109 மில்லியன் ரிங்கிட் (S$36.8 மில்லியன்) ரொக்கப் பணத்தை போலிசார் கைப்பற்றி யுள்ளதாக சீன மொழி நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. திரு நஜிப்பின் தனியார் வீடு உட்பட அவருக்குச் சொந்தமான 6 வீடுகளில் சோதனை மேற்கொண்டபோது 72 பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்தப் பைகளிலிருந்து ரொக்கப் பணத்தை போலிசார் கைப்பற்றிய தாகவும் சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கைப்பற்றப் பட்ட அந்தப் பணத்தை போலிசார் 15 பெட்டிகளில் எடுத்துச் சென்று மத்திய வங்கியில் சேர்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.