இந்துக்கள் பலரை ரோஹிங்யா போராளிகள் படுகொலை செய்ததாக அம்னாஸ்டி தகவல்

1 mins read
c7ee6d82-3ec5-463b-98d8-f369da2b50d7
-

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலவரம் வெடித்த போது ரோஹிங்யா போராளிகள், இந்துக்கள் பலரை கொன்று குவித்த தாக புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அம்னாஸ்டி எனும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. அர்சா என்று அழைக்கப்படும் போராளிகள் அமைப்பைச் சேர்ந்த வர்கள் கலவரத்தின்போது இந்துக்கள் 99 பேரை படுகொலை செய்ததாக அம்னாஸ்டி தெரி வித்துள்ளது. பங்ளாதேஷ் மற்றும் ராக்கைன் மாநிலத்தில் உள்ள அகதிகளிடம் பேட்டி கண்டதில் இந்த உண்மை தெரியவந்ததாக அந்த அமைப்பு கூறியது. மியன்மாரின் மற்ற பகுதிகளில் மக்களுக்கு எதிராக வன்செயல் கள் நடந்ததற்கும் அர்சா போராளிகளே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்தக் கொலையில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று அர்சா போராளிகள் கூறியுள்ளனர்.

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலவரம் வெடித்தபோது போராளிகளால் படுகொலை செய்யப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சடலங்களைப் பார்த்து இந்துப் பெண்கள் கதறி அழுதனர். கலவரத்தின்போது இந்துக்கள் பலரை கொன்று குவித்தது ரோஹிங்யா போராளிகளே என்று மியன்மார் ராணுவமும் அம்னாஸ்டி அமைப்பும் தெரிவித்துள்ளன. படம்: ஏஎஃப்பி