வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் வரும் ஜூன் மாதம் சந்தித்துப் பேசத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த சந்திப்பு தாமதம் ஆகலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை வெள்ளை மாளிகையில் வரவேற்றுப் பேசிய திரு டிரம்ப் இவ்வாறு கூறினார்.
திரு டிரம்ப்பும் திரு கிம்மும் வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விரு தலைவர்கள் சந்திப்பதை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் திரு டிரம்ப், அந்த சந்திப்பு திட்டமிடப்பட்ட நாளில் நடக்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருப் பதாகக் கூறியுள்ளார். வடகொரியா அதன் அணு வாயுதங்களைக் கைவிடுவதற்கான நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந் நாட்டுத் தலைவருடனான சந்திப்பு இடம் பெறும் என்று கூறி வந்த திரு டிரம்ப் இப்போது அதிலிருந்து சற்று பின்வாங்கியுள்ளார்.

