புத்ராஜெனா: தேசிய கார் நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்சை மீண்டும் வாங்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் உறுதிப்படுத்தினார். "தற்போது புரோட்டோன் நிறுவனம், கோடீஸ்வரர் சையத் மொக்தார் அல் புக்காரிக்குச் சொந்தமானது. அதை அவர் விற்பதும் விற்காமல் போவதும் அவரது இஷ்டம். ஆனால், புரோட்டோன் ஹோல்டிங்சை மீண்டும் வாங்க அரசாங்கம் எண்ணவில்லை," என மகாதீர் குறிப்பிட்டார். புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மகாதீர்: புரோட்டோன் நிறுவனத்தை அரசாங்கம் வாங்காது
1 mins read

