நஜிப்பிடம் ஆறு மணி நேரம் விசாரணை

1 mins read

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கிடம் நேற்று ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியது. அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டது இது இரண்டாம் முறை. அரசாங்க முதலீட்டு நிறுவன மான 1எம்டிபியின் துணை நிறு வனமாக இருந்த 'எஸ்ஆர்சி இன் டர்நேஷனல்' தொடர்பிலும் நிறு வனத்திற்குச் சொந்தமான பணம் முறைகேடாகப் பரிவர்த்தனை செய்யப்பட்ட சந்தேகத்தின் தொடர் பிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்ஆர்சி நிறுவனத்திலிருந்து திரு நஜிப்பின் வங்கிக் கணக்கு களுக்கு 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$14.2 மி.) பணம் மாற்றிவிடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 9.45 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்த திரு நஜிப், மாலை 4.45 மணிக்கு அதனைவிட்டு வெளி யில் வந்தார். காலை பத்து மணிக்குத் தொடங்கிய கேள்வி நேரம், மாலை 4.30 மணிக்கு முடிந்ததாக அவர் சொன்னார்.