மாஸ்கோ: கிழக்கு உக்ரேனில் 2014ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான் என்று அனைத்துலக புலன் விசார ணையாளர்கள் தெரிவித்துள் ளனர். மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ரஷ்யப் படைக்கு சொந்தமானது என்பது புலன் விசாரணையில் தெரியவந்திருப்ப தாக விசாரணைக் குழுவினர் கூறியுள்ளனர். நெதர்லாந்து தலைமையிலான விசாரணைக் குழு முதன் முறையாக மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான் என்று அறி வித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானம் ஒன்று கிழக்கு உக்ரேனில் நடுவானில் பறந்தபோது ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் சென்ற 298 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரேன் அரசு கூறியபோதிலும் ரஷ்யா அதனை மறுத்து வந்தது. உக்ரேனில் போராளிகள் வசம் இருந்த பகுதியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் போராளிகள்தான் அதைச் செய்திருக்க வேண்டும் என்று ரஷ்யா கூறி வந்தது. இந்நிலையில் விசாரணைக் குழுவினரின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

