சிங்கப்பூரிலிருந்து வரும் கார்களுக்கு நுழைவுக் கட்டணம்: மலேசிய அமைச்சரவை விவாதிக்கும்

சிங்கப்பூரிலிருந்து வரும் கார்களுக்கு நுழைவுக் கட்டணம்: மலேசிய அமைச்சரவை விவாதிக்கும்

1 mins read

கோலாலம்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் கார்களுக்கான வாகன நுழைவு கட்டண முறை மலேசிய அமைச்சர வையில் விவாதிக்கப்பட விருப்பதாக மலேசிய போக்கு வரத்து அமைச்சர் அன்டோனி லோக் கூறியுள்ளார். இந்தக் கட்டண முறையால் சிங்கப்பூரிலிருந்து வரும் கார்கள் பாதிக்கப்படுவதால் இந்த முறை குறித்து மலேசிய புதிய அமைச் சரவை விரைவில் விவாதிக்க விருப்பதாக அவர் சொன்னார். நுழைவுக் கட்டண முறை குறித்து புதிய அமைச்சர்களிடம் விளக்கம் அளித்திருப்பதாகவும் இருப்பினும் முறைப்படி அமைச்சரவையில் அதுகுறித்து விவாதிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் கார்கள் தற்போது நடப்பில் உள்ள சாலைக் கட்டணத்துடன் நுழைவுக் கட்டணம் 25 ரிங்கிட் (S$8.40) செலுத்த வேண்டியிருக்கும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திரு நஜிப் தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்தது. வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவில் திருட்டுப்போவதைத் தடுக்கும் நோக்கத்தில் அந்தக் கட்டண முறை நடப்புக்கு கொண்டுவரவிருந்ததாகக் கூறப் பட்டது. கடந்த ஜனவரி மாதம் நடப்புக்கு வரவிருந்த அந்த நுழைவுக் கட்டண முறை பின்னொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.