கோலாலம்பூர்: மலேசிய துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில், பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்று கூறினார். "அதுதான் எங்கள் வழி", என்று மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிஸா முதல் முறையாக அமைச்சுக்கு வருகையளித்தபோது நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். எவ்வளவு விரைவில் சொத்து விவரம் அறிவிக்கப்படும் என்று வினவியதற்கு, "அதை நிதி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்", என்று பதிலளித்தார். ஜனநாயக செயல்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என அக்கட்சி ஏற்கெனவே கூறியிருந்தது.
வான் அசிஸா: சொத்து விவரங்களை அமைச்சர்கள் அறிவிப்பார்கள்
1 mins read

