கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரிகள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது விலை மதிப்புள்ள கைக்கடிகாரங்களைக் கைப்பற்றினர். அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படும் விலைமதிப்புள்ள கைக்கடிகாரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும் அவை சாதாரணமாக சந்தையில் வாங்கப்பட்டவை என்றும் அப்துல் அஸிஸ் கூறியுள்ளார். அப்துல் அஸிஸின் வீட்டில் புகுந்து திடீர்ச் சோதனைகளை நடத்திய ஊழல் தடுப்பு அதிகாரிகள், ரொக்கப்பணம், அந்நிய நாணயங்கள், 20க்கும் மேற்பட்ட விலை மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
'எம்ஏசிசி அதிகாரிகள் கைப்பற்றிய கடிகாரங்கள் போலியானவை'
1 mins read

