நஜிப் வீடுகளில் $38 மி. சிக்கியது

நஜிப் வீடுகளில் $38 மி. சிக்கியது

1 mins read

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 'பெவிலியன் ரெசிடென் சஸ்' வீடுகளிலிருந்து 114 மில்லி யன் ரிங்கிட் (S$38.4 மி.) ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்று போலிஸ் தரப்பு கூறியுள்ளதாக வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்கு நர் அமர் சிங் தெரிவித்துள்ளார். "மொத்தம் 72 பைகள் கைப் பற்றப்பட்டன. அவற்றில் 35 பை களில் மட்டுமே ரொக்கம் இருந் தது," என்று திரு சிங் கூறினார். அந்த 35 பைகளில் 26 நாடு களின் நாணயங்கள் இருந்ததாக வும் 21 வங்கி அதிகாரிகள், 11 இயந்திரங்களின் துணையுடன் அவற்றை எண்ணி முடித்ததாக வும் திரு சிங் குறிப்பிட்டார்.

மற்ற 37 பைகளிலும் நகை களும் கைக்கடிகாரங்களும் இருந் ததாகக் கூறிய அவர், "அந்த நகைகள், கைக்கடிகாரங்களின் உண்மைத்தன்மையைச் சோதித் தும் அவற்றின் விலைகளை மதிப் பிட்டும் வருகிறோம்," என்றார். அவற்றின் மொத்த மதிப்பு அடுத்த வாரம் செய்தியாளர் சந் திப்பில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 'பெவிலியன் ரெசிடன்சஸ்' கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள மூன்று வீடுகளில் இரண்டு திரு நஜிப்பின் மகன், மகளுக்குச் சொந்தமானவை என்றும் மூன்றா வது வீட்டில் யாரும் வசிக்க வில்லை என்றும் அவர் கூறினார்.