'அம்னோ கட்சிப் பணத்தை திரும்பப் பெற முறையான வழிகள் உள்ளன'

'அம்னோ கட்சிப் பணத்தை திரும்பப் பெற முறையான வழிகள் உள்ளன'

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பிற்குச் சொந்தமான வீடுகளிலிருந்து போலிசார் கைப்பற்றிய ரொக்கப் பணத்தில் அம்னோ கட்சியின் பணமும் இருப்பதால் கட்சிப் பணத்தை திரும்பப் பெற விரும்புவதாக அம்னோ தெரிவித்திருந்தது. அதுபற்றி போலிஸ் படைத் தலைவர் முகமட் ஃபுஸி ஹருனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அம்னோ கட்சி அதன் பணத்தை திரும்பப் பெற சட்டப்படியான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திரு ஃபுஸி கூறியுள்ளார். "தற்போது விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிய சிறிது காலம் பிடிக்கலாம்", என்று அவர் சொன்னார். தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அம்னோ தலைவர் பதவியிலிருந்து திரு நஜிப் விலகியதை அடுத்து புதிய தலைவரிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்த கட்சியின் பணம் அது என்று அம்னோ தெரிவித்துள்ளது.