ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் பயங்கர வாதத் தடுப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாத சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்து அதிக நாட்கள் தடுப்புக்காவலில் வைப் பதற்கும் தாக்குதல் நடப்பதற்கு முன்பே சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் அந்த சட்டம் அனுமதிக்கிறது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றம் எதுவும் சாட்டப்படாமலேயே 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து போலிசார் விசாரிக்க புதிய சட்டம் வகை செய்கிறது. இதற்கு முன்பு பயங்கரவாத சந்தேக நபர்களை அதிகபட்சமாக 7 நாட்கள் வரை மட்டுமே தடுப்புக் காவலில் வைத்து போலிசார் விசாரிக்க முடிந்தது.
பயங்கரவாத தடுப்பு மசோதாவை நிறைவேற்றியது இந்தோனீசியா
1 mins read

