மகாதீர்: அதிவேக ரயில் திட்டம் கைவிடப்பட்டால் பெரும் நிதி இழப்பு

மகாதீர்: அதிவேக ரயில் திட்டம் கைவிடப்பட்டால் பெரும் நிதி இழப்பு

1 mins read
50c63809-67c1-4304-8b8a-372fbb0c5064
-

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதி வேக ரயில் திட்டத்தைக் கை விடும் நிலை ஏற்பட்டால் அதற் காக சிங்கப்பூருக்குச் செலுத்த வேண்டிய தொகையை குறைப்பது எவ்வாறு என்பதற்கான வழிவகை களை மலேசிய அரசாங்கம் காண உள்ளதாக பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார். த எட்ஜ் வார இதழுக்குப் பேட்டியளித்த அவர், "அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட முடிவெடுத்தால் அதனால் எங் களுக்கு பெருத்த செலவு ஏற் படும் என்பது ஒப்பந்த நிபந்தனை களில் உள்ளது. சிங்கப்பூருடன் இதற்கான ஒப்பந்தத்தை ஏற் கெனவே ஏற்படுத்திவிட்டோம்.

"இப்போது அதனை முறித் தால் அதற்காக பெருந்தொகையை நாங்கள் செலுத்த வேண்டி இருக் கும்," என்று தெரிவித்தார். 350 கிலோ மீட்டர் நீள அதி வேக ரயில் பாதைத் திட்டத்திற் கான ஒப்பந்தம் கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. முன் னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியின்கீழ் ஒப்பந்தம் உருவானது.

அதிவேக ரயில் பாதையில் அமைக்கத் திட்டமிடப்பட்ட பண்டார் மலேசியா ரயில் நிலையத்தின் வரைபடம். படம்: EDELMAN